Saturday, April 25, 2009

காதல் சிறகை காற்றினில் விரித்து

படம் : பாலும் பழமும்
குரல் :P.சுசிலா
வரிகள் : கண்ணதாசன்.
இசை : விஸ்வனாதன் ராமமூர்த்தி



காதல் சிறகை காற்றினில் விரித்து
வான வீதியில் பறக்கவா
கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில்
கண்ணீர் கடலில் குளிக்கவா..


எண்ணங்களாலே பாலம் அமைத்து
இரவும் பகலும் நடக்கவா...
இத்தனை நாளாய் பிரிந்ததை எண்ணி,
இத்தனை நாளாய் பிரிந்ததை எண்ணி
இரு கரம் கொண்டு வணங்கவா.. ,
இரு கரம் கொண்டு வணங்கவா..


முதல் நாள் காணும் புதமணபெண்போல்
முகத்தை மறைத்தல் வேண்டுமா?..
முறையுடன் மணந்த கணவர் முன்னாலே,
முறையுடன் மணந்த கணவர் முன்னாலே
பரம்பரை நாணம் தோன்றுமா,
பரம்பரை நாணம் தோன்றுமா


பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது..
அழுதால் கொஞ்சம் நிம்மதி
பேசமறந்து சிலையாய் இருந்தால்....
பேசமறந்து சிலையாய் இருந்தால்...
அதுதான் தெய்வத்தின் சந்நிதி.....
அதுதான் காதலின் சந்நிதி

(காதல் சிறகை)

No comments:

Post a Comment